நடிகை குறித்தான பேச்சு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜூவின் பேச்சை எவராலும் நியாயப்படுத்த முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டும். அந்த நடிகை மிகவும் மனம் நொந்து ட்விட் செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான இது மாதிரியான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். சட்டம் ராஜூவுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் எனத் தெரிவித்தார்.