இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

84பார்த்தது
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்தில் மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இட்னகளிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி