ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜா இன்று(செப்.22) கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்படும் 29 வது நபர் ஆவார். அண்மையில் சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்றவாளிகள் கைது செய்யபட்டு வரும் நிலையில் வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.