கடந்த ஆண்டை விட தற்போது விபத்துகள் 5% குறைந்துள்ளது

78பார்த்தது
கடந்த ஆண்டை விட தற்போது விபத்துகள் 5% குறைந்துள்ளது
தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்ததன் மூலம் 570 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10, 066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவானதாகவும் அதில் 10, 536 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் ஜூலை வரை 10, 589 மரண விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 11,106 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததாக மட்டும் 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி