பெரம்பூர் - Perambur

உச்சம் தொட்ட தங்கம் விலை

உச்சம் தொட்ட தங்கம் விலை

தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் தங்கம் விலை இன்று ( செப்டம்பர் 16) ரூ. 55 ஆயிரத்தை தாண்டியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்வதேச நிலவரங்களால் உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. ஆனால், கடந்த வாரத்தில் மட்டும் பெரும்பாலான வர்த்தக நாட்களில் தங்கம் விலை உயர்ந்தே உள்ளது. தமிழகத்தில் நேற்று ( செப்டம்பர் 15) இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, ரூ. 54, 920 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 55, 040ஆக விற்பனைக்கு வந்துள்ளது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 6, 880க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சம்பெற்றே வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 அதிகரித்து ரூ. 98க்கு விற்பனையாகி வருகிறது.

வீடியோஸ்


சென்னை
Sep 16, 2024, 12:09 IST/எழும்பூர்
எழும்பூர்

திமுகவுக்கு வரும் இடையூறுகளை தடுக்கும் போர்வாள் மதிமுக: வைகோ

Sep 16, 2024, 12:09 IST
திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும் அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்த இடையூறு வருவதாக இருந்தாலும், அதை தடுக்கும் போர்வாளாக மதிமுக இயங்கும். ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களது கருத்துகளை சொல்ல உரிமை உள்ளது. தமிழகத்தில் மதுவை எதிர்த்து மதிமுக போராடியதுபோல் வேறு எந்த கட்சியும் கிடையாது. மதுவை ஒழிக்க எல்லோரும் முன்வர வேண்டும். அதற்கு முன்னுரிமை எடுத்து கொள்ளக்கூடிய தகுதி மதிமுகவுக்கு உண்டு என அவர் கூறினார்.