கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழக முதல்வராக மு. க.
ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5, 381. 65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆட்சியைப் பொறுத்தளவில், கருத்து குருடர்களாக இருப்பவர் பலர் இந்து சமய அறநிலையத் துறை தமிகத்திலே ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் கூறிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில், தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, 5, 381. 65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகளை குறிப்பாக, திருக்கோயில்கள் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற ஒரு பகுதியை சார்ந்த 9 நபர்களிடமிருந்து மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆட்சியில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.