சென்னை: புதிய தாழ்தள பேருந்துகள் சேவை: தொடங்கி வைத்த அமைச்சர்

53பார்த்தது
சென்னை: புதிய தாழ்தள பேருந்துகள் சேவை: தொடங்கி வைத்த அமைச்சர்
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக பேருந்து சேவைகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், ரூ. 22. 69 கோடியில் 25 புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பல கட்டமாக இதுநாள் வரை ரூ. 170. 60 கோடி மதிப்பிலான 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் தற்போது 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறிச் செல்லும் வகையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி