திமுகவை பற்றி பேசியதற்காக கட்சியில் இருந்து தன்னை நீக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுவது ஆச்சரியமாக இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவரை மேடையில் வைத்துக்கொண்டு தான் தெரிவித்த கருத்துக்காக, ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை விமர்சிப்பது தேவையில்லாதது எனக் கூறியுள்ளார். முன்னதாக, திமுகவிடம் அடிமையாக இருக்கக்கூடாது என கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.