மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது வழங்கினார்

71பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு விஜய் விருது வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியுள்ளது. இன்றைய விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக சரியாக 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வந்தார். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் ஆளாக நாங்குநேரியில் சாதிய ஆதிக்க தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை உடன் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நன்றி ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி