ஆள் பிடிக்கும் பழக்கம் இல்லை: ஜி. கே. வாசன் கருத்து

50பார்த்தது
ஆள் பிடிப்பது, இன்னொரு கட்சியில் இருந்து இந்த கட்சிக்கு தூது விடுவது போன்ற வேலைகளை எல்லாம் தமாகாவில் யாரும் செய்வதும் கிடையாது என தமாகா தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமாகாவில் இருந்து பலர் காங்கிரஸ் கட்சிக்கு மாறியிருப்பதாக கூறுகின்றனர். எல்லா கட்சியினரும் மாறி மாறி மற்ற கட்சிகளுக்கு சென்று வந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஜனநாயக ஆட்சியில் அதற்கு இடம் உண்டு.

தமாகாவுக்கும் வட்டாரம், மாவட்டம் ரீதியாக தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் வந்து சேர்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆள் பிடிப்பது, இன்னொரு கட்சியில் இருந்து இந்த கட்சிக்கு தூது விடுவது போன்ற வேலைகளை எல்லாம் தமாகாவில் யாரும் செய்வதும் கிடையாது. நாங்கள் அதை விரும்புவதும் கிடையாது.

நேர்மை, எளிமை, வெளிப்படை தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தமாகா மக்கள் பணியை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை அழைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு பிறகு, புதுப்பொலிவுடன் எல்லா மாவட்டங்களிலும் தமாகா பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி