அனைத்து மருத்துவ பணியிடங்களை நிரப்பிடுக - எடப்பாடி பழனிசாமி

77பார்த்தது
அனைத்து மருத்துவ பணியிடங்களை நிரப்பிடுக - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தைத் துவக்கினார். இதன்மூலம், சுமார் 7, 629 மருத்துவர்கள்; 18, 846 செவிலியர்கள் உட்பட சுமார் 31, 250 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர். ஆனால், 40 மாத கால திமுக ஆட்சியில் மருத்துவப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை.

இன்றைய தேதியில் சுமார் 2, 600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக திமுக அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி