கள்ளச் சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: இபிஎஸ்

80பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு சான்று இது. உளவுத்துறை என்ன செய்கிறது?. இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் நியாயம்.

மருத்துவமனைகளில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை. விஷத்தை முறிக்கும் மருந்துகளும் கையிருப்பில் இல்லை. 2023ம் ஆண்டே கள்ளச் சாராயம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தோம். அப்போதே விவாதித்திருந்தால் இவ்வளவு உயிர்கள் போயிருக்காது.

திமுகவை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் தான் கள்ளச் சாராய விற்பனையின் பின்னணியில் உள்ளனர். காவல்துறை அதைப்பற்றி விசாரிக்கவே இல்லை. காவல்துறையும் இதற்கு உடந்தை. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் இருவர் கொல்லப்பட்டதாக கூறி அந்த வழக்கில் அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். அதேபோல் கள்ளச் சாராய மரணங்களை சிபிஐ விசாரணை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி