சென்னையில் அனுமதி இன்றி 'நோ பார்க்கிங்' (NO PARKING) அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை இன்று(செப்.24) தடை விதித்துள்ளது. வாகனங்கள் நிறுத்தம் தொடர்பான பலகைகள் வைப்பதற்கு முன், போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளை பெற்ற பின்னரே வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.