தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப். 9-ம் தேதியன்று நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப். 9-ம் தேதியன்று நடத்த உள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மத்திய அரசையும், திமுக அரசையும் வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப் படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப். 9 அன்று நடத்த இருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.