கொளத்தூர் - Kolathur

சென்னை: மருத்துவ சேர்க்கை:; 25ஆம் தேதி தொடக்கம்

சென்னை: மருத்துவ சேர்க்கை:; 25ஆம் தேதி தொடக்கம்

சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நவ. 25ஆம் தேதி முதல் நடக்கிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. அதில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து உருவான காலியிடம் உட்பட ஏழு எம்.பி.பி.எஸ். இடங்கள் மீதமுள்ளன. அதேபோல் 28 பி.டி.எஸ். பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் உள்ளன.  இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட அன்னை மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக, 50 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்துள்ளது. இந்த 50 இடங்கள் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள ஏழு எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ். என, 85 மருத்துவ இடங்களுக்கான சிறப்பு கவுன்சிலிங், நவ. 25ஆம் தேதி முதல் டிச. 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  சிறப்பு கவுன்சிலிங்கில் ஏற்கனவே இடங்கள் பெற்றவர்கள் உட்பட விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. விபரங்களை https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வீடியோஸ்


சென்னை
Nov 23, 2024, 00:11 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல் - மு. க. ஸ்டாலின்

Nov 23, 2024, 00:11 IST
2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு தேவையான நிதி ஒதுக்காதது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, கூட்டத்தில் பேசிய மு. க. ஸ்டாலின், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பாஜகவிடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என தெரிவித்தார்.