இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு: முதல்வர்

73பார்த்தது
தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், "நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது" என்ற உணர்வை நம்பிக்கையை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அமெரிக்க நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் நான் முதலமைச்சராக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், எப்படி இருக்குமோ, அதைவிட அதிகமான உணர்வுப்பெருக்கோடு சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், "நமக்கு என்று தாய்வீடாக தமிழ்நாடு இருக்கிறது" என்ற உணர்வை நம்பிக்கையை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான் ‘வேர்களைத் தேடி’ என்று, அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம். அதனால்தான், நான் எப்போதும் சொல்வேன்: இது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி