பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி: தமிழக அரசுக்கு உத்தரவு

75பார்த்தது
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதி: தமிழக அரசுக்கு உத்தரவு
கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் ஆவண பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ராம்சார் சதுப்பு நிலப்பகுதியாக பாதுகாக்கப்பட்டு வரும் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், சாலை அமைக்கப்பட்டு வருவது குறித்தும், இதற்காக அங்குள்ள சதுப்பு நில நீர்நிலைகளில் டன் கணக்கில் கட்டுமானப் பொருள்கள் கொட்டப்பட்டு வருவது குறித்தும் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 1911-ம் ஆண்டு வருவாய் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைதற்போதைய சதுப்பு நிலப்பரப்புடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி