சென்னை அருகே விபத்து.. பரபரப்பு வீடியோ!

64பார்த்தது
சென்னை மணலி அருகே பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (28). இவர் மணலி விரைவு சாலை எம். எப். எல். சந்திப்பு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்திசையில் வந்த சரக்கு வேன், இவரது பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய பைக் மற்றொரு வேன் மீது இடித்தது. அப்போது பைக்கிலிருந்து பெட்ரோல் கசிந்து, தீப்பற்றியதில் சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி