தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்

73பார்த்தது
தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (ஜூலை 10) தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.

இப் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, முகாமைத்தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் 2018-ம் ஆண்டு இப்பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெறுகிறது

தொடர்புடைய செய்தி