போலி பேராசிரியர்களை நியமித்த மோசடி வழக்கில் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின்படி தவறு செய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டார்.