வெறிநாய்க்கடியால் 44 லட்சம் பேர் பாதிப்பு...!

52பார்த்தது
வெறிநாய்க்கடியால் 44 லட்சம் பேர் பாதிப்பு...!
ரேபிஸ் நோய் என்பது தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய ஜூனோடிக் வைரஸ் ஆகும். இது மிகவும் ஆபத்தான ஒரு நோய். உலகளவில் ரேபிஸ் நோய் 150 நாடுகளில் பரவி 59, 000 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்கிறது. நாய்கள் தான் மனித ரேபிஸ் இறப்புக்கான முக்கிய காரணம். இந்த இறப்பு எண்ணிக்கையை குறைக்க இந்திய அரசு 2030க்குள் ‘ரேபிஸ் இறப்பு இல்லாத இந்தியா’ என்ற இலக்கை வைத்துள்ளது. இதற்காக இந்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு ரேபிஸ் நோயை தடுக்க செயல்திட்டத்தை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, தமிழக சுகாதார துறை அதிகாரிகள் ரேபிஸ் நோய் தடுப்பதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ரேபிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகள், திட்டங்கள் மற்றும் இடர்பாடுகள் குறித்து கண்டறிந்தனர். அதில் நாய்க்கடியை தடுப்பது, வகைப்படுத்துவது, ரேபிஸ் தொற்றை கண்டறிவது மற்றும் ரேபிஸ் தொடர்பான முந்தைய தகவல்கள் இல்லாதது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ரேபிஸ் பூஜ்ஜிய இறப்பு என்ற இலக்கை நெருங்கவில்லை என தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 2022 ல் மட்டும் 8. 83 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2030க்குள் ரேபிஸ் இறப்பு இல்லாத நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி