சந்திரபாபு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு INDIA கூட்டணி கதவு திறந்திருப்பதாக விசிக எம். பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சொந்த கட்சியை பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் சபாநாயகர் பதவி கேட்பதாகவும், பாஜகவுடன் பயணிப்பது ஆபத்து என்பதால், அக்கூட்டணி நீடிக்காது என்றும் கூறினார். அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை INDIA கூட்டணிக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.