விஜய் பட தலைப்பில் 'சனாதனம்'? - விசிக விமர்சனம்

57பார்த்தது
விஜய் பட தலைப்பில் 'சனாதனம்'? - விசிக விமர்சனம்
நடிகர் விஜயின் கோட் பட தலைப்பு சனாதானம் பொருள் கொண்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள கோட் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

வழக்கமாக விஜய் படத்தில் அரசியல் கருத்துக்கள் இடம்பெற்று ஒவ்வொரு ரிலீஸின் போதும் ஏதாவதொரு பிரச்சினை கிளம்பும். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகியுள்ள இந்த படத்துக்கு அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் பெரிதாக தலை தூக்கவில்லை.

இந்நிலையில், தற்போது கோட் படத்தின் தலைப்பின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. '' the greatest of all time '' என்பதை சுருக்கி '' GOAT '' என்று இந்த படம் அழைக்கப்படுகிறது. இதனை விமர்சித்துள்ள விசிக எம்பி ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பு சனாதனத்தை குறிப்பிடுவதாக கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி