நடிகையுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ஏ. வி. ராஜுவுக்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராஜூ, முன்னணி நடிகை ஒருவரின் பெயரை கூறி, அவரோடு இருக்க, அப்போதைய எம்எல்ஏ வெங்கடாஜலம் விரும்பினார் என்றார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், 24 மணி நேரத்தில் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என வெங்கடாசலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.