நடிகை நமிதா மனது புண்படும்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்திருந்தால் அதற்காக அவர் வருத்தப்பட வேண்டாம். நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நமீதாவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அனுமதிக்காமல் இந்து என்ற சான்றிதழ் கேட்டது தொடர்பான கேள்விக்கு, இந்த சம்பம் குறித்து நமிதா பதிவை கேட்டேன். இது குறித்து விசாரிப்பதற்கு உடனடியாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நமிதா மனது புண்படும்படி, சட்டத்திற்கு புறம்பாக எதுவாக நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நமிதா வருத்தப்பட வேண்டாம், அவர் வருத்தப்படுவதாக இருந்தால் நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.