சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய அசரென்கா

83பார்த்தது
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய அசரென்கா
அமெரிக்காவில் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தையை சுற்று இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, டெய்லர் டவுன்சென்ட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் அசரென்கா ஆட்டத்தை இழந்தார். அடுத்த இரண்டு செட்களில் 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கு பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி