கும்பமேளாவில் மொபைல் ஃபோன்களுக்கு சார்ஜ் போடுவதன் மூலம் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 வரை வருமானம் ஈட்டுகிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் செல்ஃபோன்களுக்கு சார்ஜ் போடுவதற்கு இந்த இளைஞர் பணம் வசூலிக்கிறார். அவர் வைத்திருக்கும் சார்ஜ் போர்டைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 25 ஃபோன்களுக்கு சார்ஜ் செய்கிறார். ஒரு போனுக்கு ரூ.50 வசூலிக்கிறார்.