கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து தேவிகுளம் வழியாக தேக்கடிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் காரை காட்டு யானை தாக்கியது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்தது.
நல்வாய்ப்பாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர். காட்டு யானையை அருகில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். தொடர்ந்து இப்பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் இவ்வழியாக பயணிக்கும் அனைவரும் பாதுகாப்புடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.