அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்

66பார்த்தது
அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. இவருடைய குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் உள்ளனர். இந்நிலையில், வரவுள்ள மக்களவை தேர்தலில் 350 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாக உள்ளனர். இந்த விஷயம் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரான் பகதூர் தபாவுக்கு 5 மனைவிகள் உள்ளனர். 12 மகன்கள் மற்றும் 9 மகள்களும் உள்ளனர். இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி