8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

81பார்த்தது
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 18) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி