8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

77பார்த்தது
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஜுன் 3) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி