நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு

10353பார்த்தது
நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலாவில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் கூட்டத்தில் கலந்து கொள்ள முன் அனுமதி பெறவில்லை என துணை தாசில்தார் ராமச்சந்திர ராவ் வழக்கு பதிவு செய்தார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அல்லு அர்ஜுன் எனது நண்பருக்காக என் விருப்பத்தின் அடிப்படையில் தான் நான் இங்கு வந்தேன், அதற்காக நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கிறேன் என அர்த்தம் இல்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி