புத்தாண்டு கொண்டாட்டத்தில் புகுந்த கார்.. 10 பேர் பலி

56பார்த்தது
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். போர்பான் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் கூடியிருந்தபோது கார் வந்து மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு 10 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார் ஓட்டுனரை போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி