புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவகையான புற்றுநோயாக இருந்தாலும் சரி அதை பொறுத்தவரை வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். உலகளவில் எந்த நாடாக இருந்தாலும் சுகாதாரக் கல்விதான் முதல் தடுப்பு முறையாக இருக்கும். புகைப்படங்கள், சினிமாக்கள், விளம்பரங்களால் ஓரளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.