நெய் சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது என்பது தெரியும். அந்த நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வைரல் நோய்களை தடுக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.