பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு முழுவதுமாக அனுமதி மறுக்க முடியாது. வேண்டுமானால் எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்ற விவரங்களை அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பேரணி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.