தவறவிட்ட ரயிலுக்கான டிக்கெட்டை வைத்து மாற்று ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வே விதிகள் என்ன சொல்கின்றன என்றுப பார்க்கலாம். ரயில்வேயின் விதிகளின்படி, ஒரு பயணி பொது கோச் டிக்கெட் வைத்திருந்தால், அவர் வேறு ரயிலில் பயணம் செய்யலாம். வந்தே பாரத், சூப்பர் பாஸ்ட், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணிகளிடம் முன்பதிவு டிக்கெட் இருந்தாலும், ஒருமுறை ரயிலைத் தவறவிட்டுவிட்டால், அதே டிக்கெட்டை வைத்துக்கொண்டு மற்றொரு ரயிலில் பயணம் செய்ய முடியாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.