எனக்கு தலையே சுற்றிவிட்டது - கலாய்த்த முதலமைச்சர்

62பார்த்தது
எனக்கு தலையே சுற்றிவிட்டது - கலாய்த்த முதலமைச்சர்
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறி இருக்கிறார்? என்று எண்ணிப் பார்த்தபோது எனக்கு தலையே சுற்றிவிட்டது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலாய்த்து இருக்கிறார். திமுக - மதிமுக - தமாக - புதுவை மாநில காங்கிரஸ் - பின்னர் மீண்டும் தமாக - காங்கிரஸ் - பாஜக என்று பல கட்சிகள் அவர் தாவி இருக்கிறார். இன்னும் இரண்டு மாதம் கழித்து வந்து பார்த்தால் அவர் எந்த கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. அது நமச்சிவாயத்திற்கே தெரியாது” என்று முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.