நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு, அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என தவெக கட்சியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகளுக்கு தனித்தனியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.