தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.17,616 கோடி மதிப்பிலான 19 முடிவற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 புது திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதலமைச்சர், “தொழிலதிபர்கள் தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாற வேண்டும். உங்களைப் போன்ற மற்ற நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்” என பேசினார்.