தெற்கு சீனாவின் நான்னிங் நகரில் கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பணியின் போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33 அடி உயரத்திற்கு எழுந்த மலக்கழிவுகள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மழையாய் பொழிந்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.