தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் யு-9 உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் இறுதிப்போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 254 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே சொதப்பி வந்தது. இந்நிலையில் 43.5 ஓவர்களுக்கு 174 ரன்கள் எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.