கள்ளக்குறிச்சி அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. பழமையான கோயில் என்பதால் இது பக்தர்கள் இடையே பிரபலமானதாக இருக்கின்றது. இக்கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலையை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.