மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் புஷிரா ஆற்றில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சென்றபோது, படகில் அளவுக்கு அதிகமானோர் பயணித்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே சமயம் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.