வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தலிபான் ஆதரவு மதகுருமார்கள் மையத்திற்குள் உள்ள ஒரு மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.