மெஜாரிட்டியை நெருங்கும் பாஜக கூட்டணி!

66பார்த்தது
மெஜாரிட்டியை நெருங்கும் பாஜக கூட்டணி!
காலியாக இருந்த 56 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தலில், 30 இடங்களை பாஜக வென்றிருக்கிறது. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால், கூடுதலாக 2 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. தற்போது மாநிலங்களவையில் தனிப் பெரும் கட்சியாக மொத்தம் 97 எம்.பிக்களை கொண்டிருக்கிறது பாஜக. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் மொத்தம் 117 எம்.பிக்கள் இருக்கின்றனர். மெஜாரிட்டிக்கு வெறும் 4 இடங்களே குறைவாக இருக்கின்றது.

தொடர்புடைய செய்தி