அம்பானி மகன் திருமணத்தில் 2500 வகை உணவுகள்

577பார்த்தது
அம்பானி மகன் திருமணத்தில் 2500 வகை உணவுகள்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு தாய்லாந்து, ஜப்பான், மெக்சிக்கோ, பார்ஸி, அனைத்து ஆசிய நாடுகளிகளின் 2,500 வகையான உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களும் தினமும் 4 நேரம் சாப்பாட்டிற்கு வகை செய்யப்பட்டுள்ளது. காலை உணவில் 75 வகையான உணவு பரிமாறப்படுகிறது. மதிய உணவில் 225 வகையான உணவும், இரவு உணவுக்கு 275 வகையான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு சாப்பாடு கொடுக்கப்படுகிறது. நள்ளிரவு விருந்துக்கு 85 வகையாக உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு விருந்து அதிகாலை 4 மணி வரை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி