ஜப்பானில் தொடர்ச்சியாக 30 முறை சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இது ரிக்டர் அளவுவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கடல் நீர் நகருக்குள் வர ஆரம்பித்துள்ளது. இதனை தொடர்ந்து வடகொரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலும்
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜப்பானில்
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.