லோக்சபா தேர்தலுக்கு முன் 2024 ஜனவரி முதல் வாரத்திற்கு பிறகு பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை தொடங்க
காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பாரத் ஜோடோ யாத்திரை 2.0 ராகுல் காந்தி தலைமையில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்து மேற்குப் பகுதிகளுக்கும் பாரத் ஜோடோ யாத்திரை போன்ற பேரணி நடத்தப்படும் என்று
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூறியுள்ளார். இதற்கான 2 வழிகளை
காங்கிரஸ் ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் நல்லிணக்கத்தை அதிகரித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.