கீரை வகைகளில் இயற்கையான புளிப்புச் சுவையை நமக்கு அறிமுகப்படுத்திய கீரைதான் புளிச்ச கீரை. இது உடல் வலி, கட்டிகள் மற்றும் வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டது. காசநோய் பாதிப்பை குறைக்கும் புளிச்ச கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. நார்ச்சத்து அதிகம் கொண்ட புளிச்ச கீரையில் இருந்து தயாரிக்கப்படும் கோங்குரா தேநீர், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக பயன்படுகிறது.